விசிக மனித சங்கிலி பேரணிக்கும் ஆப்பு - இதுதான் காரணமாம்! - Seithipunal
Seithipunal


அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தது.

இதற்க்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விசிக சார்பில், அதே அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்தார். 

இதற்கிடையே இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மட்டும் அதன் 8  அமைப்புகளை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், விசிக-வின் இந்த சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு நாம் தமிழர் மற்றும் இஸ்லாமிய காட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வரும் மாதம் 2ம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும், சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக இருவருக்குமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

வெளியான தகவலின் படி, தெற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் பாம், பஸ் கண்ணடி உடைப்பு, கஞ்சா, கொலை, கொள்ளை சம்பவங்கள், திமுகவினரின் மிரட்டல் வீடியோக்கள் வெளியாகி சட்டம் ஒழுங்கு ஒன்றே இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டும் நிலையில், இதில் மனித சங்கிலி பேரணி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தால் ஏதுனும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் ஆளும் அரசுக்கு பெரும் கரும்புள்ளியாக வந்துவிடுமோ என்ற காரணத்திற்காவே காவல்துறை அனுமதி மருத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK and RSS riot cancel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->