#சற்றுமுன் || உச்சநீதிமன்றத்தில் வன்னியர் இடஒதுக்கீடு விசாரணை தொடங்கியது.! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர் சமூகத்திற்கு எம்.பி.சி பிரிவில் 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்க கூறி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தின் எதிரொலியாக கடந்த அதிமுக ஆட்சியின் போது எம்.பி.சி பிரிவில் வன்னியர் என்ற உள் பிரிவு ஒதுக்கப்பட்டு, 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து உத்தரவிட்டார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நாள் முதல், அதனை தடைவிதிக்க வேண்டும் என்று, எம்.பி.சி. பிரிவில் உள்ள பிற ஜாதிகள் போர்க்கொடி தூக்கினர். மேலும், இதுசம்மந்தமாக தொடரப்பட்ட பல்வேறு வழக்கில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 % உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 100 பக்கங்களுடன் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் குமணன் தாக்கல் செய்து இருந்தார். மேலும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் பாமக தலைவர் ஜி கே மணி அவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சற்றுமுன் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanniyar Reservation case in supreme Court DEC


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->