மேற்குவங்க அவலத்தை I.N.D.I.A தலைவர்கள் கண்டிக்காது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி நடந்த கலவரத்தின் போது 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மணிப்பூர் சம்பவத்தை தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஜூலை 8ம் தேதி நடைபெற்ற மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறிய கொடுமைக்கு கண்ணீர் வடித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் ஏற்பட்ட அவலம் குறித்து மௌனம் காக்கிறார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் மால்டா எனும் இடத்தில் இரண்டு பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி இரக்கமில்லாமல் தாக்கிய காட்சிகள் மிகுந்த கவலை அளிக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்ற இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து ஏராளமான கண்ணீர் வடிக்கு நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் அமைதியாக இருக்கிறார்.

இது மேற்கு வங்க முதல்வராக அவரது தோல்வியை அம்பலப்படுத்துகிறது. தாகபந்தன் I.N.D.I.A வில் இருந்து எந்தத் தலைவரும் இந்த சம்பவத்தை கண்டிக்கவில்லை. பெண்களின் பாதுகாப்பில் அவர்களுக்கு எந்த தீவிரமும் இல்லை, வெறும் பிரச்சார அரசியலையே இது காட்டுகிறது" என விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi condemns BJP female candidates naked West Bengal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->