வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் நீலகிரி மாவட்டம், கோவை கோவை மாவட்டம் மற்றும் வால்பாறையில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதி ஒட்டி இந்த தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளதால் எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 500 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

தற்பொழுது வால்பாறையில் உள்ள 10 எஸ்டேட்டுகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கியுள்ள நிலையில் தற்போது 50 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை டேன் டீ நிர்வாகத்தினர் இறங்கியுள்ளனர். 

அதிமுகவை சேர்ந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி டேன் டீ எஸ்டேட் பகுதிக்குச் சென்று தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டிருந்தார். விருப்ப ஓய்வு அளிக்கும் தொழிலாளர்களுக்கு தல 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், 3000 ஏக்கர் தேயிலை தோட்டத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அமுல் கந்தசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டேய் டீ எஸ்டேட் தொழிலாளருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க. முயன்ற அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Valparai admk MLA amul kandasamy arrested


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->