உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருக்கின்றதா? மத்திய அமைச்சர் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருக்கிறதா.? என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார். அதற்கு மத்திய கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

வைகைப் கேள்விகள் பின்வருமாறு :

1. நாடு முழுமையும் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றதா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா? அதுகுறித்த புள்ளி விவரங்கள் அரசிடம் இருக்கின்றதா? வேலை வாய்ப்புகளில் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன?  

3. ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்காகத் தேர்வு செய்கின்றபொழுது, இட ஒதுக்கீடு குறித்து விளம்பரங்கள் தரப்படுகின்றதா? அதுகுறித்து, அரசு அறிவுறுத்தி இருக்கின்றதா?  

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.

5. உயர்கல்வி நிறுவனங்களில் காலியாகக் கிடக்கின்ற ஒதுக்கீட்டு இடங்களை எப்போது நிரப்புவீர்கள்?

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் :

இதுகுறித்த விளக்க அறிக்கை, அவை முன்பு வைக்கப்படுகின்றது. ஒன்றிய அரசின் பொறுப்பில் உள்ள பல்கலைக்கழகங்கள், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU), இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், ஐஐடிகள், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், (ஐஐஎம்), ஐஐடிகளில், தற்போது பணியில் இருக்கின்ற பட்டியல் இன மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியல் விவரம்.

மேற்கண்ட நிறுவனங்களில் உள்ள காலிப் பணி இடங்கள் குறித்த அட்டவணை. (இணைப்பு) இவை தவிர, கல்வி அமைச்சத்தின் பொறுப்பில் உள்ள மேற்கண்ட நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் காலியாகக் கிடக்கின்ற பணி இடங்களை, 2021 செப்டெம்பர் 5 ஆம் நாள் தொடங்கி, 2022 செப்டெம்பர் 4 க்குள் நிறைவு பெறுகின்ற அடுத்த ஓராண்டுக்கு உள்ளே, தகுதியானவர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான பணிமுறை (Mission Mode) வகுத்துச் செயல்பட்டு வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko question for reservation in higher education


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->