பழனிச்சாமியின் கைக்கூலி ஆர்.பி உதயகுமார்! பழனிச்சாமிக்கு சவால் விடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ! - Seithipunal
Seithipunal


முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா பசும்பொன்னில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற உள்ளது. அதிமுகவை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதிமுகவின் இபிஎஸ் அணி சார்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிலையில் ஓபிஎஸ் எனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 11:30 மணியளவில் பசும்பொன் செல்ல உள்ளார்.

கடந்த 28ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட பழனிச்சாமி ஆதரவாளர்கள் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பொழுது தேவர் நினைவிடத்தில் பழனிச்சாமி ஆதரவாளர்கள் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் மதுரை மாவட்ட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேவர் குருபூஜைக்கு ஓபிஎஸ் தலைமையில் பசும்பொன்னிற்கு செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் "கட்சியில் 90% பேர் எங்கள் பக்கம் என சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி தைரியம் இருந்தால் பசும்பொன்னுக்கு வந்து பார்க்கட்டும் நேற்று கைக்கூலி ஆர்.பி உதயகுமார் விரட்டியடிக்கப்பட்டார். பழனிச்சாமி ஆதரவாளர்களால் தேவரின் தங்க கவசத்தை வாங்க முடிந்ததா? மன்னிப்பே கேட்டாலும் கட்சியில் மீண்டும் சேர்க்க மாட்டேன் என சொல்கிறார்கள். 

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஓபிஎஸ் உடன் இருந்தேன். அரை மணி நேரம் முதல்வர் ஸ்டாலுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளார் பன்னீர்செல்வம். நேற்று கூட கைக்கூலி உதயகுமார் அதற்கான ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆதார பூர்வமாக பன்னீர்செல்வம் ஸ்டாலினுடன் பேசியதை நிரூபிக்கட்டும் நானும் காவி வேட்டி கட்டிக்கொண்டு கட்சியை விட்டு விலகுகிறேன்" என சவால் விடுத்துள்ளார் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Usilampatti MLA ayyappan challenge to palaniswami team


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->