பழிக்கு பழிவாங்குவேன்! மிரட்டல் விடுத்த உ.பி எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி பதவி நீக்கம்! இரு ஆண்டு சிறை!
UP BSP MLA disqualify
வெறுப்புப் பேச்சு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால், உத்தரப் பிரதேச மாவ் தொகுதி எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல குற்றவாளியும் முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரியின் மகன்.
2022ல் எஸ்பிஎஸ்பி சார்பில் வெற்றி பெற்ற அப்பாஸ், “அதிகாரிகளை பழிக்கு பழிவாங்குவேன்” என்ற அவரது வெறுப்புரை காரணமாக ஐபிசி 153A, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி, விசாரணை முடிவில் கடந்த சனிக்கிழமை 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.
ஜாமீன் கிடைத்தும், விடுமுறை நாளில் சட்டப்பேரவைக் கட்டிடம் திறக்கப்பட்டு, விரைந்து பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காரணமாக, அன்சாரி சட்டப்பேரவைக்கு ஜாமீன் விவரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.
இதனையடுத்து மாவ் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டில் இடைக்கால தடை இருந்தாலும், தகுதி நீக்கம் நடைபெறுவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மாவ் தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.