சசிகலாவின் சுற்றுப்பயணம்! எடப்பாடிக்கு ஆப்பு! மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவேன்! - Seithipunal
Seithipunal


பிரிந்துகிடக்கும் அதிமுகவையும் அதிமுகவினரை ஒருங்கிணைத்து ஜெயலலிதா ஆட்சி மீண்டும் உருவாக்குவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார்.அதன்படியில், தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இன்று தனது சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கினார்.

அப்போது, காரில் அமர்ந்தப்படி சசிகலா பேசியதாவது, தமிழக மக்களை சந்திப்பது பெருமையாக உள்ளது. எம்ஜிஆர் ஆள் உருவாக்கப்பட்டவர்கள் எல்லாம் ஏழை,எளியவர்கள் நலம் பெறும் வகையில் திட்டங்களை தந்தவரே எம்ஜிஆர்.

அவரது வழிகாட்டுதலில் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சியை நடத்தினார். ஆனால் திமுக ஆட்சியில் எந்த ஒரு நல திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்றி உள்ளார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். 2026 ஆம் ஆண்டு அதிமுகவினரை ஒருங்கிணைத்து ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம். அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

unite the AIADMK and rebuild Jayalalitha regime by Sasikala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->