தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் வருகையில் 02-ஆம் இடத்தை பிடித்துள்ள மதுரை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் அவர்களை அதிகம் கவர்ந்த சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை 02-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 

மதுரை  மாவட்டம் அரசியல், தமிழர்களின் ஆன்மிகம், வர்த்தகம், கலை பண்பாட்டின் முக்கிய தலைநகராக விளங்குகிறது. மதுரையை சுற்றி, ஏராளமான சுற்றுலாத் தலங்கள் நிறைந்துள்ளன. தற்போது கோயில்களைத் தாண்டி, மதுரையின் உணவு பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் வர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பொங்கல் பண்டிகை காலத்தில் ஜல்லிக்கட்டு, சித்திரைத் திருவிழா காலத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தரும் வைபவம், மற்ற காலங்களில் வரலாற்று நடைபயணங்கள், பழைய சந்தைகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தொல்பொருள் தலங்களைப் பற்றியும் அறிவதற்கு மதுரைக்கு பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் நடைபெறுகிறது. 

மதுரையின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் சுற்றுலாதான் முதுகெலும்பாக உள்ளது. தற்போது உணவுச் சுற்றுலாவும் மதுரைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இங்கு கறிதோசை, வெங்காயக்கறி, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், பன் பரோட்டோ, பருத்திப்பால், முள்ளு முருங்கை வடை என விதவிதமான சைவ, அசைவ உணவுகள் பிரபலமானது. தற்போது இந்த உணவுகள் குறித்து காணொலிகள் மற்றும் சமூக ஊடக மதிப்புரைகள் இந்த உணவுச் சுற்றுலா ஆர்வத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு தூண்டுகின்றன.

கடந்த 2018-இல் 02 கோடியே 45 லட்சத்து 16 ஆயிரத்து 815 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 02 லட்சத்து 65 ஆயிரத்து 121 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அடுத்து 2019-இல் 03 கோடியே 65 லட்சத்து 57 ஆயிரத்து 527 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 02 லட்சத்து 52 ஆயிரத்து 947 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

கரோனாவுக்குப் பிறகு மதுரைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய ஆரம்பித்தது. 2020-இல் 01 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரத்து 585 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 81 ஆயிரத்து 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் 01 கோடியே 39 ஆயிரத்து 58 ஆயிரத்து 605 பேர் மதுரைக்கு சுற்றுலா வந்தனர்.

அடுத்ததாக, 2021-இல் 99 லட்சத்து 33 ஆயிரத்து 666 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 195 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அந்த ஆண்டு வெறும் 99 லட்சத்து 33 ஆயிரத்து 861 பேர் மட்டுமே வந்திருந்தனர். 2022-இல் 1 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரத்து 414 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 16 ஆயிரத்து 637 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

கடந்த 2023-இல், 01 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 92 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 26 ஆயிரத்து 154 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அதாவது, 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை மீண்டும் மதுரைக்கு அதிகரிக்க தொடங்கியது.

2024-இல் 2.2 கோடி சுற்றுலாப் பயணிகளும், 2025-இல் 2.29 கோடி சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். 57,564 ஆக இருந்த வெளிநாட்டுப் பயணிகள் வருகை, 2024-ஆம் ஆண்டில் 98,770 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இடங்களில் தற்போது தமிழகத்தில் மதுரை 02-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

விரைவில் மதுரை முதல் இடத்தை பிடிக்க, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவரையும், திருமலை நாயக்கர் மகால், அழகர் கோயில், சோலமலை முருகன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், காந்தி அருங்காட்சியகம், வண்டியூர் மாரியம்மன் கோயில், கீழக்குயில்குடி, கீழவளவு சமணர் மலைகள், ஒத்தக்கடை யானைமலை போன்ற மற்ற சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப் பார்க்க வைப்பதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றதாக சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai ranks 2nd in tourist arrivals in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->