ரூ.3,030 கோடி பட்ஜெட்டில் 03 ரசாயன பூங்காக்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்; அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறத்து. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இந்திய ரசாயனத் தொழில் துறை மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் 'பவ்யா ரசாயன்' என்ற திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், ரூ.3,030 கோடி செலவில், மூன்று ரசாயனப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், இத்திட்டம் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியில் அறிவிக்கப்பட்டு  செயல்படுத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பவ்யா ரசாயனத் திட்டமானது, மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன், ரசாயனத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும். ரசாயனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதன்மூலம் இந்தத் தொழில்துறை உலகளவில் போட்டித்தன்மை மிக்கதாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மருந்துப் பொருட்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து போன்ற பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களையும், பெட்ரோ ரசாயனங்களையும் பவ்யா ரசாயன் திட்டம் ஊக்குவித்து அவற்றின் உற்பத்தியை மேம்படுத்தும்.

இத்திட்டத்தின்படி, மூன்று பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தப் பூங்காக்கள் ரசாயனத் தொழிலுக்கான உள்கட்டமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிறந்த நீர் விநியோக அமைப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ashwini Vaishnav announces Union Cabinet approval to set up 03 chemical parks with a budget of Rs 3030 crore


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->