சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்..? எந்த தொகுதி தெரியுமா..?
Union Minister of State L Murugan to contest the Assembly elections
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, வேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 05 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகத்தில், 23 -ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று, மே 04 -ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அணைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிகளுடனான தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியும், இறுதி முடிவுகளில் மும்முரமாக உள்ளனர். இதில், ஒவ்வொரு காட்சியிலும் தேர்தலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு எனும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நீண்ட நாட்களாக தொகுதி பங்கீட்டில் இழுபறியை எதிர்க்கொண்டு வந்த என்.டி.ஏ. கூட்டணியில் நேற்று (23-ஆம் தேதி) பாஜக, அமமுக மற்றும் அன்புமணி பாமக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து எந்தெந்தத் தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது எனும் ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் மத்திய இணை அமைச்சராக இருந்து வரும் எல். முருகன் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், இரண்டு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிட உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில், அன்றைய பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் தமிழ்நாடு பாஜக தேர்தலைச் சந்தித்தது. அப்போது 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 04 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அந்தத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழியிடம் 1,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இதனைத் தொடர்ந்து எல். முருகன், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், எல். முருகன் மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, அவர், அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Union Minister of State L Murugan to contest the Assembly elections