அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி.. அதிர்ச்சியில் அதிமுக தலைமை.!! - Seithipunal
Seithipunal


காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வுமான நடராஜ் ஒரு அணியாகவும், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அணிகள் இடையே அவ்வப்போது கோஷ்டி பூசல் ஏற்பட்டு வந்தது. 

தற்போது  இந்த கோஷ்டி பூசலால் மகேஷ்குமார் அதிமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர்ந்து கட்சி பாகுபாடின்றி பணியாற்றும் வகையில் என்னை அதிமுகவிலிருந்து விலகி கொள்வது என்று முடிவு செய்துள்ளேன். வரும் காலங்களில் கட்சி பாகுபாடு இன்றி, பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union committee chairman resigns from admk


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal