#வீடியோ:பாவாடை சட்டை., கண்ணை தொறக்கணும் சாமி.! கதிகலங்கும் உதயநிதி தேர்தல் பிரச்சாரம்.! 
                                    
                                    
                                   udhayanithi election campaign 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் கடந்த 19ம் தேதி முதல் தங்களது அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலினின் மகன் ஆகிய உதயநிதி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பிலும், மக்கள் கிராமசபை கூட்டம் என்ற தலைப்பிலும் உதயநிதி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
உதயநிதி பிரச்சாரம் செய்யும் பல மேடைகளில் ஆபாசமான ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர். அண்மையில் உதயநிதி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பின்பு மன்னிப்பு கேட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் மேடை போல் அந்த பேனரில் உதயநிதி படம் இடம்பெற்றுள்ளது.
 ஒரு பாவாடை சட்டையுடன் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் ஒரு சினிமா திரைப்பட பாடலுக்கு நடனம் ஆட தயாராகி, அந்த பாவாடை சட்டை போட்ட பெண், 'கண்ண தொறக்கணும் சாமி., கைய புடிக்கணும் சாமி.,' என்ற திரைப்பட பாடலுக்கு ஒரு மாதிரி ஆடுகிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது ஒருவித ஆபாசம் நிறைந்ததாக இருப்பதால், ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்படி சினிமா பாடலை பொதுமக்களுக்கு மத்தியில் ரெக்கார்ட் டான்ஸ் போல திமுகவினர் செய்வது சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனுடன் மேலும் ஒரு காணொளியும் வைரலாகி வருகிறது. தமிழர் பண்பாட்டை திமுக கட்டி காக்கும் முறை இதுதானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       udhayanithi election campaign