IPL போல் அதிமுகவில் பல அணிகள்.!! போட்டு தாக்கிய உதயநிதி.!! பின்னாடி யாரு பாருங்க.!! 
                                    
                                    
                                   Udhayanithi criticized Aiadmk like IPL teams
 
                                 
                               
                                
                                      
                                            மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை திமுக தரப்பு தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து நேற்று பரப்புரை மேற்கொண்டார். 
இந்த பரப்புரையின் போது அதிமுகவை விமர்சனம் செய்துள்ள உதயநிதி ஐபிஎல் போல பல அணிகள் இருப்பதாகவும் தாக்கி பேசியுள்ளார். 

தங்க தமிழ்ச்செல்வனுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி பேசியபோது "அதிமுகவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் உள்ளது போல இபிஎஸ், டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஜெ.தீபா என பல்வேறு அணிகள் உள்ளன"என விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தேனி வேட்பாளரை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். 

ஆனால் திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் தற்போது திமுக சார்பில் 3வது முறையாக தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதிமுகவில் பல அணிகள் இருப்பதாக விமர்சனம் செய்துள்ள உதயநிதி பல கட்சிக்குத் தாவிய தங்க தமிழ்ச்செல்வனுக்காக தற்போது வாக்கு சேகரிப்பதாக அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். 
                                     
                                 
                   
                       English Summary
                       Udhayanithi criticized Aiadmk like IPL teams