அப்படியா..! நல்லா இருக்கு..!! பழனிச்சாமி பேச்சு குறித்தான கேள்விக்கு உதயநிதியின் நக்கல் பதில்..!! - Seithipunal
Seithipunal


உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக அமைக்கப்பட்ட பூங்காவில் இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று அவர்களுக்கென அமைக்கப்பட்ட பூங்காவில் மாணவர்களோடு சேர்ந்து கலந்துரையாடினேன். 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். என்னுடன் சென்னை மேயர், அமைச்சர் என அனைவரும் கலந்து கொண்டார்கள். அரசின் கவனத்திற்கு அவர்களின் கோரிக்கையை கொண்டு சென்று நிச்சயம் நிறைவேற்ற முயற்சி எடுப்போம்" என தெரிவித்தார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் திராவிட மாடலுக்கான வியூகத்தை கொண்டு வந்தது நாங்கள் தான் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளாரே?! என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த உதயநிதி சிரித்தபடியே "அப்படியா..!!" சொல்லியவாறு நகர்ந்து சென்றார். அதற்கு செய்தியாளர் பழனிச்சாமியின் கருத்து பற்றி உங்கள் பார்வை என்ன என திரும்ப கேள்வி எழுப்பினார். அதற்கு "நல்லா இருக்கு...!" என்று நக்கலுடன் பதில் அளித்தவாறு அங்கிருந்து கிளம்பி சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin sarcastic response to a question on EPS


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal