பாஜகவின் கதவு திறந்தே இருந்தாலும்.. நிலைப்பாடு இது தான்.. உறுதியாக நிற்கும் அதிமுக.!!
Udhayakumar said AIADMK stand was did not alliance with BJP
சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூட்டணி கட்சிகளுக்கான பாஜகவின் கதவுகள் திறந்து இருக்கின்றன. அது அதிமுகவுக்கும் பொருந்தும் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் "வலிமையான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. மாநில உரிமைகளை மீட்கும் அளவிற்கு வலிமையான கூட்டணியை அமைப்போம்.

மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க திமுக தோழமைக் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. பொது உரிமை கட்சிகள் கூட மக்கள் நலனுக்கு குரல் கொடுக்கவில்லை. போதைப் பொருள் கடற்கரை தமிழ்நாடு அரசு கண்டுபிடிக்கவில்லை ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும் அரசு பணியில் இல்லாத ஆர்.எஸ் பாரதியின் பதிலை எப்படி ஏற்பது?
எதிரிகள் கூட பாராட்டும் அளவுக்கு ஆட்சி செய்தவர்கள் தான் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. அவர்களை அவமதித்தால் ஒற்றை வாக்கு கூட கிடைக்காது. கூட்டணி கதவு திறந்து உள்ளது என்பது பாஜகவின் நிலைப்பாடாக இருக்கலாம் ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Udhayakumar said AIADMK stand was did not alliance with BJP