அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்திய தவெக கீர்த்தனா!
TVKs Keerthana Defeats Veteran Rajendra Balaji
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் பல ஜாம்பவான்களை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டத்தின் முக்கியத் தலைவரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இளம் வேட்பாளர் எஸ். கீர்த்தனாவிடம் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இன்று மாலை 5 மணி நிலவரப்படி வெளியான 10-வது சுற்று முடிவுகள், அதிமுக-வின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
இத்தேர்தலில் தவெக வேட்பாளர் எஸ். கீர்த்தனா 30,165 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய தேசிய காங்கிரஸின் ஜி. அசோகன் 26,310 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
ஆனால், பலமுறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ராஜேந்திர பாலாஜி 26,085 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 3,855 வாக்குகள் வித்தியாசத்தில் கீர்த்தனா முன்னிலை பெற்றுத் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தவெக தனது முதல் தேர்தலிலேயே தகர்த்தெறிந்துள்ளதற்கு இந்த முடிவு ஒரு சிறந்த உதாரணமாகும்.
English Summary
TVKs Keerthana Defeats Veteran Rajendra Balaji