வெற்றிச் சான்றிதழைப் பெறச் செல்லும் விஜய்! தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடி உற்சாகக் கோஷம்!
tvk Vijay to Collect Victory Certificates
மறுபுறம், தமிழக அரசியல் களத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அதற்கான வெற்றிச் சான்றிதழ்களை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.
திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யைக் காண, வாக்கு எண்ணும் மையத்தின் வெளியேயும் அவர் செல்லும் வழியெங்கும் தவெக தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடி உற்சாகக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
English Summary
tvk Vijay to Collect Victory Certificates