பதற்றமா இருக்கு... செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay press meet in madurai
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்தாவது, "ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன்.
விரைவில் உங்கள் (மதுரை மக்கள்) மண்ணில் நம் கட்சியின் சார்பில் மீண்டும் சந்தித்து பேச உள்ளேன். இன்றைக்கு ஒரு மணி நேரம் மட்டும் லேண்ட் ஆகி, உங்களைப் பார்த்துவிட்டு, என் பணிக்காக கிளம்புகிறேன்.
நீங்களும் சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், அவரது எதிர்பார்ப்பையும் விழிப்புணர்வாகக் கூறிய விஜய், "யாரும் என் வேன் அல்லது கார் பின்னால் பின்தொடர வேண்டாம்.
பைக்கில் வேகமாக ஓடுவது, இடையில் நின்று செல்பி எடுப்பது, தலைக்கவசமின்றி வருவது மனதிற்கு பதற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம். லவ் யூ ஆல்" என வேண்டுகோள் விடுத்தார்.
English Summary
TVK Vijay press meet in madurai