தர்மபுரியில் அதிர்ச்சி: சாதி பெயரை சொல்லி 17 வயது சிறுவன் விடிய விடிய கட்டி வைத்து தாக்குதல்..!
A 17 year old boy was tied up and attacked in Dharmapuri by saying his caste name
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கரைக்கோட்டையை சேர்ந்த குறித்த சிறுவன் பெட்ரோல் பங்க் ஒன்றி குறுகிய காலம் வேலை பார்த்துள்ளான். பின்னர், வேலையைவிட்டு நின்ற சிறுவன் தனது மாமாவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் ஆத்திரடைமந்துள்ளார்.

இதன் காரணமாக சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் சிறுவனின் சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏ.பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளநிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்ளிட்ட 04 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
A 17 year old boy was tied up and attacked in Dharmapuri by saying his caste name