மதுரையில் விஜய்! ரோடு ஷோவா? பதறும் தவெக நிர்வாகிகள்! விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
TVK Vijay Madurai visit
தவெக நிர்வாகி மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வெற்றித் தலைவர் தளபதி அவர்கள் ஜனநாயகன் படப்பிடிப்பு தொடர்பாக மதுரை வழியாக படபிடிப்பு தளத்திற்கு செல்கிறார். கட்சி நிகழ்ச்சிக்காக செல்லவில்லை.
கட்சி சார்பாக எந்தவொரு நிகழ்வும் ஏற்பாடு செய்யவில்லை. ரோடு ஷோ நடத்துவதற்கும் கட்சி சார்பாக ஏற்பாடு செய்யவில்லை.
வெற்றித் தலைவர் தளபதி அவர்களை பார்ப்பதற்காக அன்பின் மிகுதியால் பொது மக்கள் தானாக குடும்பம் குடும்பமாக கூடி வருகிறார்கள்.
பொது மக்களும்,தோழர்களும் இதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் பின் தொடர்வதையும் தவிர்க்க வேண்டும். அண்மையில் கோயம்புத்தூர் சென்ற வெற்றித் தலைவர் தளபதி அவர்களை மக்கள் தானாக திரண்டு அமோக வரவேற்பை கொடுத்தார்கள்.
கோயம்புத்தூரிலும் ரோடு ஷோவிற்கு கட்சி சார்பாக திட்டமிடவில்லை.வெற்றித் தலைவர் தளபதி அவர்களைப் பார்த்தால்தான் நாங்கள் களைந்து செல்வோம் என்று பொது மக்கள் வலுக்கட்டாயமாக காத்திருந்து வெற்றித் தலைவர் தளபதி அவர்களைப் பார்த்து சென்றார்கள்.
பொது மக்களையும்,தோழர்களையும் பார்த்து கையசைத்தால் மட்டுமே களைந்து செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டதால்தான் வெற்றித் தலைவர் அவர்கள் வாகனத்தில் ஏறிநின்று மக்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்தினார்.
அதே போன்றுதான் மதுரையிலும் பொதுமக்களும்,தோழர்களும் வெற்றித் தலைவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்திற்கும்,வெற்றித் தலைவர் தளபதி அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பது தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் கடமை.தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கோடு செயல்படாமல் தலைவருக்கும்,மக்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதை உறுதி செய்யுங்கள்.
வேடிக்கை பார்க்காமல் பொது மக்களை ஒழுங்குப் படுத்தும் செயலை செய்யுங்கள்.
தலைவரை பார்க்காமல் செல்ல மாட்டோம் என்று தன்னெழுச்சியாக கூடிய மக்களிடம் தலைவர் கையசைத்து செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
வெற்றித் தலைவரோ,தமிழக வெற்றிக் கழகமோ மதுரையில் ரோடு ஷோ நடத்துவதற்கு எந்த திட்டமிடலும் செய்யவில்லை.
வெற்றித் தலைவரின் வாகனத்திற்கு முன்பு செய்தி சேகரிக்க செல்லும் ஊடக,பத்திரிக்கை வாகனங்கள் இடையூறு ஏற்படுத்தாமல் செய்தி சேகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
வெற்றித் தலைவர் தளபதி அவர்களின் வாகனம் விரைந்து செல்வதற்கு ஊடக, பத்திரிக்கை வாகனங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.வெற்றித் தலைவர் தளபதியின் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்.
பொது மக்களின் அன்பை பெரிதும் மதிக்கிறோம். அதே நேரத்தில் தன்னெழுச்சியாக கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.