அனல் மறக்கும் TVK மாநாடு! சுருண்டு விழும் தொண்டர்கள்! ட்ரான் மூலம் குடிநீர் விநியோகம்!
TVK Vijay Madurai Manadu Drone way water supply
மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டுத் திடலில் கடும் வெப்பம் காரணமாக தொண்டர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த சிக்கலை சமாளிக்க டிரோன்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1.5 லட்சம் இருக்கைகள், பார்க்கிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடமாடும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவசர நிலையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பல ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதலே தொண்டர்கள் கூட்டமாக வந்து சேர்ந்தனர். காலை 10 மணிக்குள் பந்தலிலிருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. இந்நிலையில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியதால், மக்கள் கடும் வெயிலில் தவித்து வருகின்றனர்.
சிலர் தரை விரிப்புகளை கிழித்து தற்காலிக கூடாரங்களை அமைத்து நிழலைத் தேடினர். பலர் தங்களுடைய இருக்கைகளை தலைக்கவசம் போல் பயன்படுத்திக் கொண்டனர். குடைகளுடன் வந்தவர்கள் அதனை பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தினர். கடும் வெப்பத்தால் பத்துக்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில், அங்குள்ள மருத்துவ முகாம்களில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சூழலில், தொண்டர்களுக்கு உதவியாக டிரோன் மூலம் குடிநீர் பாட்டில்கள் மேலிருந்து வீசப்பட்டு வழங்கப்பட்டன. திடலில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள், குழாய்கள் மூலமாகவும் தண்ணீர் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாட்டின் கூட்ட நெரிசலும், கடும் வெப்பமும் இருந்தபோதிலும், தொண்டர்கள் பலரும் மயங்கி விழுந்து வருகின்றனர். இருப்பினும் உற்சாகத்துடன் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
English Summary
TVK Vijay Madurai Manadu Drone way water supply