உங்களுக்கு CM பதவி எதற்கு? ஆட்சி எதற்கு? ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி!
TVK Vijay DMK MK Stalin Protest
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரைக் கண்டித்து தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பும் கோரியிருந்த நிலையில், சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகையுடன் விஜய் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது, "அஜித்குமார் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அவருக்கான இழப்புக்கு முதலமைச்சர் ‘மன்னிக்கவும்’ என்று கூறியது தவறில்லை.
ஆனால், அதே ஆட்சியில் இதேபோல 24 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பங்களுக்கும் சாரி சொல்லுங்க. அஜித்குமாரின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போலவே, மற்ற குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்க,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலிருந்து அஜித்குமார் வழக்கு வரை, அனைத்திலும் நீதிமன்றமே தலையிட்டு கேள்விகள் கேட்கிறது. நியாயம் கேட்க நீதிமன்றமே இருந்தால், நீங்களும் உங்கள் அமைச்சர்களும் இருக்க என்ன தேவை?
மக்களுக்கு ‘சாரி மா... நடக்கக் கூடாதது நடந்துடுச்சு மா’ என்பதைத்தான் பதிலாக சொல்வதென்றால், உங்கள் அரசு வெறும் 'சாரி மா மாடல்' அரசு தான்” என்று கடுமையாக விஜய் விமர்சித்தார்.
English Summary
TVK Vijay DMK MK Stalin Protest