தவெக அதிமுக கூட்டணியிலா, பாஜக கூட்டணியிலா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!
TVK vijay BJP ADMK Alliance Nainar Nagendran
பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.வெ.க. கட்சியின் தற்போதைய கூட்டணி நிலை மற்றும் கரூர் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில், கரூர் நிகழ்வுக்கு பிறகு த.வெ.க. கட்சியின் அரசியல் காணாமல் போய்விட்டது போல தெரிகிறது. அந்த நிகழ்வின் காரணத்தை நாம் கவனமாக ஆராய வேண்டும். அப்போது, கட்சித் தலைவர் விஜய்யின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால், அதன் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் குறித்து அவர் பேசும்போதே அவர்மீது செருப்புகள் வீசப்பட்டன என்பது ஆட்சியாளர்களின் பொறுப்பின்மையை காட்டுகிறது.
இதுபோன்ற சூழலில் விஜயின் பாதுகாப்பு குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்துள்ளோம். நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நடைபெறும் என நம்புகிறோம் என்றார்.
அதே சமயம், அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. சேர வாய்ப்புள்ளதா எனக் கேட்கப்பட்டபோது, அதுபற்றி அந்தக் கட்சியிடமே கேட்க வேண்டும் என கூறினார்.
விஜய் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் ஏற்க தயாரா என்று கேட்கப்பட்டபோது, நயினார் நாகேந்திரன் சிரித்தபடி “பார்ப்போம்” என்ற ஒரே சொல்லில் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
English Summary
TVK vijay BJP ADMK Alliance Nainar Nagendran