ஊழல் பெருச்சாளிகள எல்லாம் கட்சில சேர்த்துக்கிட்டு தூய சக்தியாம் - விஜயை வெளுத்துவாங்கிய நாம் தமிழர் இடும்பாவனம்!
TVK Vijay ADMK ex mla NTK Idumbavanam karthi
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழக வெற்றி கழகத் (த.வெ.க) தலைவர் விஜய் தனது கட்சிக் கட்டமைப்பை அசுர வேகத்தில் வலுப்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன்: 2016-ல் வாசுதேவநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற இவர், 2021-ல் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நீண்ட நாட்களாகக் கட்சி நடவடிக்கைகளில் ஒதுங்கியிருந்த இவர், தற்போது விஜய்யை நேரில் சந்தித்துத் தன்னை த.வெ.க-வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன்: 2011-2016 காலகட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியன், தற்போது த.வெ.க-வில் ஐக்கியமாகியுள்ளார். 2006 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவரின் நீண்ட கால அரசியல் அனுபவம், த.வெ.க-வின் தென் மண்டல வாக்கு வங்கிக்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி கடுமையான ஒரு விமர்சனத்தை முவைத்துள்ளார். அதில், "2011 - 2015 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் அதிமுகவின் ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்த ந.சுப்ரமணியன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார்.
அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 65 இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக இவர் மீது சேலத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரால் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவின் பெயரில் 2022ஆம் ஆண்டு சுப்ரமணியன் மற்றும் அவரது மகள் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.
அந்த வழக்கு 2024ஆம் ஆண்டு தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டு, தற்போதும் நிலுவையில் இருக்கிறது. திமுக, அதிமுகவுல அதிகாரத்துல இருந்து ஊழல் பண்ண ஊர்ல உள்ள ஊழல் பெருச்சாளிகள எல்லாம் கட்சில சேர்த்துக்கிட்டு, தூய சக்தியாம்" என்று விமர்சித்துள்ளார்.
English Summary
TVK Vijay ADMK ex mla NTK Idumbavanam karthi