"அறிவாலயத் தாழ்வாரத்தில் கமல்... துண்டு துண்டாக விற்கப்படும் தேமுதிக": நாஞ்சில் சம்பத் விளாசல்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடைபெற்ற தவெக-வின் முப்பெரும் விழாவில், அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் திமுக மற்றும் பிற அரசியல் கட்சிகளைத் தனது வழக்கமான பாணியில் வறுத்தெடுத்தார்.

அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் எழுதிய தமிழக அரசியல் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை விஜய் எழுதப்போகிறார் என நாஞ்சில் சம்பத் முழங்கினார். தவெக-வின் வளர்ச்சி முதலமைச்சர் ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது; கட்சியின் பெயரைச் சொல்லக்கூட அவர் அஞ்சுகிறார் எனச் சாடினார்.

மாற்று அரசியலைப் பேசிய கட்சிகள் திமுக-விடம் சரணடைந்துவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்தார்: அதில் "டார்ச் லைட்டுடன் வந்தவர் இப்போது அறிவாலயத் தாழ்வாரத்தில் ஓய்வெடுக்கிறார் என்றார்.

விஜயகாந்தின் கட்சியைப் பிரேமலதா துண்டு துண்டாக வெட்டி விற்கத் தயாராகிவிட்டார். தன்னையே திமுக-விடம் தொலைத்துவிட்டு இப்போது மதுரையிலும் திருச்சியிலும் கட்சியைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

திமுக என்பது ஒரு மூடநம்பிக்கை; அது இஸ்லாமியர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. ஆளும் கட்சி பணபலம் மற்றும் குண்டர் பலத்தைப் பயன்படுத்தினால், தவெக 'மக்கள் பலத்தால்' (People Power) அதனை முறியடிக்கும்.

 தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கத் தவறிய முதலமைச்சர், இப்போது தவெக தொண்டர்களைத் தாக்கத் துணிகிறார்.

இஸ்லாமியர்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத திமுக-விற்குப் பாடம் புகட்ட கடற்கரை மக்கள் முதல் அனைத்துச் சாலைகளும் இப்போது 'பனையூரை' நோக்கி நகரத் தொடங்கிவிட்டன என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk Nanjil Sampath DMK dmdk mnm kamal


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->