ஒரு சின்ன தப்பு நடந்துச்சு! உடனே திருத்தி புதிய வீடியோவை வெளியிட்ட விஜய்! - Seithipunal
Seithipunal



தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் விளக்க காணொளியில், தமிழகம் என்று எழுதுவதற்கு பதிலாக த"ழி"ழகம் என்று தவறாக எழுவது போல இருந்தது.

இதனை பலரும் விமர்சித்துவந்த நிலையில், தற்போது அதனை திருத்தி, புதிய காணொளியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் விளக்கம் குறித்து அந்த காணொளியில் விஜய் தெரிவிதிவித்திருப்பதாவது, "அரசியல்ல மட்டுமில்ல பொதுவாகவே நமக்கு ஒரு பெரிய அடையாளம் இருக்கனும்னா, நம்ம பேரே ஒரு அடையாளமா மாற்றனும்.

அதுக்கு அப்படி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அந்த பேர்ல இருக்கணும். அந்த எனர்ஜியை கொடுக்கிறது அந்த பேர்ல இருக்க வார்த்தைகளோட வலிமை தான். அப்படி ஒரு நேர்மறை அர்த்தமும். நேர்மறை அடர்த்தியும். நேர்மறை அதிர்வும், நேர்மறை வலிமையும் ஒருசேர கொண்டு ஒரு சொல் என்னைக்குமே தன்னோட தன்மையை இழக்காத ஒரு சொல்லு. 

இந்த வார்த்தை சொல்லும் போதே உச்சரிக்கிற உங்களை மட்டும் இல்லை ஒட்டுமொத்த ஒரு பெரும் கூட்டத்தையே உணர்ச்சியோடு உச்சத்தில வைக்கிற சொல்லு, உற்சாகப்படுத்துற சொல்லு. நம்ம மக்களோட நாடி நரம்புகள் நானேற்றம் அந்த சொல், அந்த வார்த்தை, வேற என்ன வெற்றி! வெற்றி! வெற்றி தான்.

அந்த சொல் வெற்றி, நான் நெனச்சது மிச்சம் மீதி இல்லாம செஞ்சு முடிக்க மனசுக்குள்ள இருக்க நோக்கத்தை நிறைவேற்று வாகை சூடுவது என்று பல அர்த்தங்கள் இருக்கு. அப்படிப்பட்ட ஒரு வார்த்தை தான் நம்ம கட்சியோட மைய சொல்லாகும், மந்திர சொல்லவும் மாறி நிற்கிறது.

அப்புறம் நம்ம கட்சியோட முதல் சொல் தமிழகம். 

நம்ம மக்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் சொல்ற மாதிரி ஒரு வார்த்தை, நம்ம கட்சி பேரோட முதல் வார்த்தையா இருக்கணும்னு முடிவு பண்ணி தேர்ந்தெடுத்தது தான் இந்த தமிழகம் என்ற வார்த்தை. 

தமிழகம் தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம்னு சொல்லலாம். புறநானூறுல, சிலப்பதிகாரத்தில், மணிமேகலைல. பதிற்றுப்பத்தில் இருந்து நம்முடைய பல இலக்கியங்கள் இடம் பிடித்த ஒரு வார்த்தைதான் இந்த தமிழகம்.

தமிழ ஒழுங்கா, முறையா ஆழமா படிச்சு நிறைய பேர் நமக்கு சொல்லித் தந்திருக்காங்க. இந்த தமிழகம் தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவால முறைப்படி தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது என்கிறது நாம எல்லாருக்கும் தெரிஞ்ச, நாடு எரிஞ்சு வரலாறு.

இப்ப நம்ம கட்சி பேரோட மூணாவது வார்த்தைக்கு வருவோம். "கழகம்" 

இதுதான் இந்த மூன்றாவது பாகம், கழகம் இடம்னு ஒரு அர்த்தம் இருக்கு, அந்த வகையில் நம்மளோட இளம் சிங்கங்கள் பயிலும் இடம் தான் நமக்கு கழகம் என்று சரியாக புரிந்து விட்டது. 

"தமிழக வெற்றிக் கழகம்" இந்த மூணு வார்த்தைகளைக் கொண்டு மூன்றெழுந்திருக்கும் அரசியல் உலகின் அணையா பெருஞ்சுடர் தான் தமிழக வெற்றிக் கழகம். அது மட்டும் இல்லாம பெரும் புயலியும், சூறாவளியும் தனக்குள்ள ஒளிச்சு வச்சுருக்க "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" உள்ள உயிர் நாதமும் சேர்ந்துதான் நம்ம கட்சியோட அடையாளமா மாறிட்டு. 

இனி வரப்போற நாட்கள் ஒட்டுமொத்த மக்களோட ஆதரவாளையும், ஆசிர்வாதத்தாலும் தமிழ்நாட்டின் வெற்றிக்கும், தமிழ் நாட்டில் இருக்க மக்களோட வெற்றிக்கும், அஸ்திவாரம் போட்டு தமிழ்நாட்டோட உலக தமிழர்களோட ஒரு மிகப்பெரிய அடையாளமா மாறி காலகாலத்துக்கும் களத்தில் வெற்றிகரமாக நிற்க போறதுதான் நம்ம தமிழக வெற்றிக் கழகம். வாழ்க தமிழக வெற்றிக்கழகம், வளர்க தமிழகம்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Name Deflation video TVK Vijay


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->