த.வா.க வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்தார்.! - Seithipunal
Seithipunal


தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்து கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன் மனைவியாக இருந்தவள் நான். அவரால் எனக்கு வெளியில் சொல்லமுடியாத துன்பங்கள் ஏற்பட்டன. அவரிடம் இருந்து விடுதலைக்கு வழி தேடிக் கொண்டிருந்தேன். மேலும் கடந்த 2018 இல் விவாகரத்து செய்து கொள்ளலாம் என வலியுறுத்தினார்.

விவாகரத்துக்கு சட்டப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவரிடமிருந்து பிரிந்து வெளியே வந்துவிட்டேன். தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். மேலும் அவர் என்னை பழிவாங்கும் எண்ணத்தில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறார்.

வேல்முருகன் திமுக கூட்டணியில் செல்வாக்கோடு எம்.எல்.ஏ-வாக இருப்பதால் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. என்னை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரிந்த பாஜகவினர் வாயிலாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைந்து விட்டேன் இனி என்னை அவர்கள் காப்பாற்றுவர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK leader velmurugan ex wife kayathri join BJP


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->