டம்மிகளின் டாடியாக இருந்தாரா? நாடே கைகொட்டி சிரிக்கிறது... வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பும் தவெக ஐடி விங்க்!
tvk it wing say about veeramani case dmk mk stalin
தவெக ஐடி விங்க் விடுத்துள்ளசெய்திக்குறிப்பில் , "வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?
உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா?
வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்? வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?
தி.மு.க. ஆட்சியில் கிரானைட் கிரிமினல் மட்டும்தான் மூடி மறைக்கப்பட்டதா?.
கொடநாடு கேஸ் விவகாரமும் சீக்ரெட் டீலிங்கில்தான் கிடப்பில் போடப்பட்டது. இப்போது ஒவ்வொரு விவகாரமாகத் தோண்டி எடுக்கப்படுகிறது.
அதேபோல கொடநாடு கேஸும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அப்படி மக்கள் விருப்பம் நிறைவேறுமெனில், பாதியில் தொங்கிக் கொண்டிருக்கும் மற்றும் பலர் கம்பெனி மீதியும் கரைந்து காணாமல் போகும். இதை மறந்துவிட்டு ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது.
English Summary
tvk it wing say about veeramani case dmk mk stalin