எம்.ஜி.ஆர். குறித்து ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி! திமுக ஒரு தீய சக்தினு சொன்னதே எம்ஜிஆர் தான்! அரசியல் வார்த்தைப் போர் தீவிரம்! - Seithipunal
Seithipunal


சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிய கருத்துக்கு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் விமர்சனங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் திமுகவில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருந்த கட்சிக்குத்தான் நீங்கள் வந்துள்ளீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டே எம்.ஜி.ஆர். முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தனிக்கட்சி தொடங்கிய பிறகும், கலைஞரையே தனது தலைவராக எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்" என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள தவெக ஐடி பிரிவு, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தது வரலாறுதான். ஆனால், பின்னர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி, தனது வாழ்நாள் முழுவதும் திமுகவின் அரசியலை எதிர்த்தவரும் அவரே. திமுகவை 'தீயசக்தி' என்று விமர்சித்ததும் எம்.ஜி.ஆர்தான்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழலை உருவாக்கினார். அந்த வரலாற்றையும் ஸ்டாலின் நினைவுகூர வேண்டும்" என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் தவெக விமர்சனம் முன்வைத்துள்ளது. "சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததற்கு முந்தைய ஆட்சிதான் காரணம். தற்போது தேர்தல் எப்போது வந்தாலும் மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது. இனி வரும் தேர்தல்களில் திமுக தோல்வியைச் சந்திக்கும்" என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். அரசியல் மரபை மையமாகக் கொண்டு திமுக மற்றும் தவெக இடையே உருவாகியுள்ள இந்த கருத்து மோதல், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK hits back at Stalin remarks on MGR It was MGR himself who called the DMK an evil force The political war of words intensifies


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->