திமுக மாதிரி தவெக அரசும் செயலிழந்துடக் கூடாது...! - தொடர் கொலைகளால் கொதித்தெழுந்த டிடிவி தினகரன் பகீர் அறிக்கை...! - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து கடுமையான கவலை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் காரணமாக சட்டம்-ஒழுங்கு நிலைமை மக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பொதுமக்களின் உயிர், உடமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் திமுக ஆட்சியைப் போல தற்போதைய தவெக அரசும் செயலிழந்து விடக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடகராக செயல்பட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த கொலை, சேலம் பகுதியில் மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட தொடர் வன்முறைகள் மக்களின் மனதில் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “திமுகவின் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் காவலர்களின் அதிகார செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததே சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கான முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் அதே நிலை தொடருகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறும் கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாத்து அமைதியான சமூக சூழலை நிலைநிறுத்துவது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து தவெக அரசும் அதன் முதல்-அமைச்சரும் செயல்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk government should not be dysfunctional DMK TTV Dhinakaran enraged by series murders makes statement


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->