தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல்!வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் நிதிநிலை அறிக்கை?விஜய் போடும் பிளான் பி? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை அடுத்த வாரம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த பட்ஜெட், "அறம், பொருள், இன்பம்" என்ற தமிழ் முப்பால் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிர்வாகத்தில் நேர்மை மற்றும் ஒழுக்கம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில கருவூலத்தில் நிதி நெருக்கடி நிலவி வருவதாக அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும் புதிய இலவசத் திட்டங்கள் அல்லது பிரம்மாண்ட நலத்திட்ட அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு குறைவாக இருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்குப் பதிலாக, மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை பொதுமக்களிடம் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் நிதித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாய், நிலவும் நிதிப் பற்றாக்குறை மற்றும் எதிர்கால நிதி மேலாண்மை குறித்து மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பட்ஜெட் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, நீண்டகால பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்ட திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்பப் பூங்காக்கள், கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும் என்றும், பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் கடன் சுமையை குறைக்கும் திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நிதித்துறை வட்டாரங்கள் கூறுகையில், தற்போதைய நிதி நெருக்கடி தற்காலிகமானது என்றும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

பொதுவாக புதிய அரசுகள் முதல் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமாக இருந்தாலும், தவெக அரசு அதற்கு மாறாக நிதி ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த முதல் நிதிநிலை அறிக்கை, தவெக அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்களின் திசையை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாக இருக்கும் என்று அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK government first budget to be presented next week A budget prioritizing development What is Vijay Plan B


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->