தேர்தல் களத்தில் வேகமெடுக்கும் த.வெ.க...! - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பட்டியல் வெளியீடு - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைத்து கண்காணிக்க சிறப்பு மேற்பார்வை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த், முன்னாள் அமைச்சர் மற்றும் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் K.A. செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொறுப்பேற்கின்றனர்.

இவர்களின் தலைமையில், தேர்தல் பணிகள் தீவிரமாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk gaining momentum election arena List Chief Observers released


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->