திமுக அரசுக்கு டிடிவி தினகரன் வைத்த கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் அங்கு சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனாநோயாளிகள் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்தசம்வம் குறித்து அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்  உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன.

இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழக அரசு நிர்வாகம் இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dinakaran tweet for chengalpattu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->