டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு: கூட்டணியில் மீண்டும் இணைவாரா..?
TTV Dinakaran and Annamalai meet
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் சந்தித்து பேசியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளனர்.
அதிமுக -பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேற்பாளராக பழனிசாமியை ஏற்கமாட்டோம் என டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார். அத்துடன், அண்ணாமலை தனது நண்பர் எனவும் டி.டி.வி. குறிப்பிட்டு இருந்தார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய தினகரனிடம் வலியுறுத்துவேன் என அண்ணாமலையும் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு நேரில் சந்தித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை - டிடிவி தினகரன் இடையேயான சந்திப்பு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TTV Dinakaran and Annamalai meet