ஆட்சிக்கு வர திமுக செய்த தில்லுமுல்லு சத்தியம்! சந்தேகப் புயலை கிளப்பிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran Tweet about Neet Exam
நீட் தேர்வு விவகாரத்தில், பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற சந்தேகம் உருவாகியிருப்பதாக அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்கள் குறித்து தி.மு.க அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்தது பொதுமக்களிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்த பிறகே இதுகுறித்து வெளியில் தெரிய வந்திருப்பதால், நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதன் பிறகும்கூட தி.மு.க அரசு இப்பிரச்னையைப் பூசி மெழுகதான் முயற்சிக்கிறதே தவிர, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் செய்த தில்லுமுல்லு சத்தியம் அவர்களுக்கு வேண்டுமானல் மறந்து போயிருக்கலாம்; தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran Tweet about Neet Exam