பாஜகவுடன் கூட்டணி அமையலாம்., சசிகலா-ஓபிஎஸ் சந்திப்பு? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் விவரம் பின்வருமாறு,

செய்தியாளர் : பன்னீர்செல்வம்-சசிகலாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தேவர் இன அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பற்றி., 

டிடிவி தினகரன் : அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்களை பற்றி சொன்னார்கள் என்றால், நீங்கள் அவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் அதற்கு பதில் எதுவும் கிடையாது.

செய்தியாளர் : ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் உங்களை வரவேற்றது ஏன்? 

டிடிவி தினகரன் : நான் வருவதை தெரிந்து கொண்டு, மதுரைக்கு செல்லும் வழியில் சையது கான் என்னை சந்தித்து, அவர்களின் மாவட்டத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு கொடுத்தார். இதில் எந்த அரசியலும் கிடையாது. ஒரு நட்பு ரீதியான சந்திப்பு மட்டும் தான். பழைய நண்பர் கூட எனக்கு அவர்.

செய்தியாளர் : பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தது குறித்து.,

டிடிவி தினகரன் : அதுகுறித்து நீங்கள் சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும்.

செய்தியாளர் : 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், பாஜக உடன் கூட்டணி குறித்து?

டிடிவி தினகரன் : வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று எல்லாருமே எதிர்பார்க்கிறார்கள். நானும் எதிர்பார்க்கிறேன். நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் அப்படித்தான் நடக்கும் போல் தெரிகிறது.

பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்குமா? என்ற இந்த கேள்வியை, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கேளுங்கள். அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது அதற்கு என்ன தேவை இருக்கிறது. 

பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை ஒன்று பாஜக ஆட்சி பிடிக்கும். இல்லை காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைப்பது தான் வழக்கம். 

அந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேலை நீங்கள் சொன்னது கூட நடக்கலாம்" என்று பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து டிடிவி தினகரன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about bjp alliance july


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->