தமிழக அரசு மந்தமாக இருக்கு.. தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மழை வெள்ள பாதிப்பின் போது தென் மாவட்டங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமாக பேசி இருந்தார். அப்போது வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு வழங்காதது குறித்து உதயநிதி செய்த விமர்சனத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். இதனால் பாஜக மற்றும் திமுக தரப்புகளுக்கு இடையே வார்தைப்போர் மூண்டுள்ளது. 

இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் மந்தமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார் டிடிவி தினகரன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணம் ரூ.6000 உதவித்தொகையை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளை பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்கிட வேண்டும் என டிடிவி தினகரன்வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran insists tnrain flood declared as national calamity


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->