அரசியலுக்கு வரும் திரிஷா.? பரவிய தகவல்களுக்கு பதில் கூறிய நடிகை.!
Trisha about her Politics arrival
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா முதன் முதலில் சிம்ரன் - பிரஷாந்த் ஆகியோர் நடித்த ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதன்பின்னர், சிம்புவின் அலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அஜித், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதனை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற படங்களாக தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பூ போலவே திரிஷாவும் அரசியலில் களமிறங்க போவதாக தகவல் வெளியாகியது. மேலும், மாநில கட்சிகளில் சேராமல் தேசிய அளவிலான அரசியலை கையிலெடுக்க போவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து அவரிடம் சமீபத்திய பேட்டியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு திரிஷா, " எனக்கு இப்போது நடிப்பு மட்டும் தான் குறிக்கோள். அரசியல் பற்றி யோசிக்கும் எண்ணம் இப்போது இல்லை." என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டபோது, அவர், "எங்கள் கொள்கைகளையும், மதச்சார்பின்மையையும் ஏற்றுக் கொள்ளும் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்." என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trisha about her Politics arrival