உப்புமா ஆரோக்கியமான உணவு.. மீண்டும் வெற்றி பெறும்.. தந்தைக்கு பதிலடி தந்த சூரியா சிவா..!! - Seithipunal
Seithipunal


நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உப்புமா கதை சொல்லி நாடாளுமன்றத்தில் சிரிப்பு அலை ஏற்படுத்தியதுடன் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.

அந்த உப்புமா கதையின் முடிவில் மாணவர்களின் போராட்டம் வீணாகி மீண்டும் உப்புமா உணவு பரிமாறப்பட்டது என உவமையுடன் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்து கதையை சொல்லி முடித்து இருந்தார். 

அதாவது மாணவர்கள் போல் எதிர்க்கட்சிகள் செயல்படுவதால் உப்புமா எனும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததாக பேசி இருந்தார். மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்பட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளார் என பேசி இருந்தார்.

இந்த நிலையில் இதற்கு சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அவருடைய மகன் திருச்சி சூரியா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி தந்துள்ளார்.

திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பதிவில் "ரொட்டி மற்றும் ஆம்லெட்- சைவ உணவுகள் அல்ல,  பூரி - எண்ணெய் பொருட்கள், ஆலு பராட்டா - மைதா மற்றும் கொழுப்பு, மசாலா தோசை மற்றும் இட்லி- கார்ப்ஸ், இறுதியாக உப்மா வருகிறது. மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் ஆரோக்கியமான மற்றும் சிறந்த தேர்வு உப்மா என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

எனவே இப்போது உப்புமாவுக்கு எதிராக கிளர்ச்சி இல்லை & உப்மா மீண்டும் எப்போதும் வெற்றி பெறும்" என திமுக எம்பியும் தனது தந்தையுமான திருச்சி சிவாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy Surya Siva reacts to his father criticism of BJP


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->