மின்தட்டுப்பாடு.. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின்வெட்டு என்பது அதிகமாக உள்ளது. திய திட்டங்கள் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி கிடைப்பதால் மின் தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் தேவையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் தமிழக அரசு உள்ளது. 

இதன் காரணமாக மின் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்கால தேவையை உணர்ந்து திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மின்சாரத் துறைக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை மேல் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

கோடைகாலத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம், தொழில் நிறுவனம் மின்சார வசதி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மின் மோட்டார்கள் பொருத்தும் பணி, மின்சார வாரியங்களில் ஏற்படும் விபத்துக்கள், அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்வது குறித்தும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்த உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow senthil balaji meeting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->