நாளை எம்பிக்கள் கூட்டம்... திமுக பங்கேற்குமா...? - சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் எழுப்பிய அதிரடி கேள்வி...!
Tomorrow MP meeting Will DMK participate Minister Nirmal Kumar dramatic question Assembly
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று சட்டசபையில் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குறித்தும் அரசியல் ரீதியான கேள்விகள் எழுந்தன.

சட்டசபையில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்ததாவது,"யாரைப் பார்த்தும் முதல்-அமைச்சர் விஜய்க்கு எந்தவிதமான அச்சமும் கிடையாது. அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்கு எங்களுக்கு என்ன பயம் இருக்கிறது என்று உதயநிதி கேள்வி எழுப்புகிறார்.கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு எந்தப் பயமும் இருந்ததில்லை. அனைத்து முடிவுகளையும் ஒருமித்த கருத்துடன் தான் மேற்கொண்டு வருகிறோம். தீர்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம்.
நாளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா?
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் நாளை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த முக்கியமான விவகாரம் குறித்து நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்களா என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
English Summary
Tomorrow MP meeting Will DMK participate Minister Nirmal Kumar dramatic question Assembly