ஒன்று கூடும் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்.. வெளியாகப்போகும் அறிவிப்புகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 

இதனால், பாராளுமன்ற திமுக தலைவர் டி ஆர் பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்பிகள் குடியரசு தலைவர் அலுவலகம் சென்று நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விரிவாக மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகையால், சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் 6.1.2022 அன்று நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இதையடுத்து, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணி அளவில் தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு பிறகு நீட் விலக்கு சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today tamilnadu all party meeting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->