இன்றே கடைசி நாள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். குறுகிய காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுதாக்கல் தொடங்கியதால், கூட்டணி கட்சிகளுக்கு இடப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை விரைந்து அனைத்து கட்சிகளும் மேற்கொண்டுவருகின்றனர். 

இடப்பங்கீடு பங்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி நீடித்ததால், இடப் பங்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று வரை ஒரு சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். திமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கின்றனர். அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர். 

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அனைவரும் நின்று முண்டியடித்துக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today last day to nominations


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->