சென்னையில் இன்று கருணாநிதியின் சிலை திறப்பு.. உற்சாகத்தில் திமுகவினர்.!!
today karunanidhi statue open at chennai
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, ரூ. 1.56 கோடி மதிப்பில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட உள்ள கருணாநிதி சிலையை இன்று மாலை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறார்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார். விழாவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை ஏற்ற உரையாற்றுகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
English Summary
today karunanidhi statue open at chennai