இன்று மகாத்மா காந்தி பிறந்த நாள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர்  சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is mahatma gandhi birthday courtesy of chief minister mk stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->