பள்ளி சிறுமிக்கு முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட ஹவுஸ் ஓனர்; போதையில் மற்றுமொரு பெண்ணுடன் லூட்டி அடித்த வீடியோ லீக்; கைதான மரக்கடை வியாபாரி.!
Timber merchant arrested for sexually abusing schoolgirl by kissing her in Coimbatore
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மரக்கடை வியாபாரி ஒருவர், 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மற்றுமொரு பெண்ணுடன் சேர்ந்து ஆட்டம் போட்டடுள்ள எல்லைமீறிய வீடியோவும் வெளியாகி சர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவிக்குமார் என்ற நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான வீட்டில் 11ஆம் வகுப்பு படித்துவரும் மாணவியும், அவரது குடும்பத்தினரும் வாடைக்கு வசித்து வருகின்றனர். ஹவுஸ் ஓனர் என்பதால் ரவிக்குமார் வீட்டிற்கு அடிக்கடி பள்ளி மாணவி சென்று வருவதோடு, அவருடன் சகஜமாக பழகி வந்துள்ளார்.

கடந்த 02 நாட்களுக்கு முன்னர் வழக்கமாக குறித்த மாணவி ரவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த ரவிக்குமார், அம்மாணவிக்கு முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
ஹவுஸ் ஓனரின் இந்த செயல் குறித்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், இது குறித்து அம்மாணவி தனது சகோதரரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ரவிக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் மாணவியிடம் ரவிக்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை சிறையில் அடைத்துள்ளார். அப்போதுதான் போதையில் மற்றொரு பெண்ணுடன் அவர் சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Timber merchant arrested for sexually abusing schoolgirl by kissing her in Coimbatore