ரேஷன் கடை ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ரேஷன் கடை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அதிகரிப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்குப் பணியில் சேர்ந்த ஒரு வருடம் மட்டும் ஓராண்டு வரை விற்பனையாளர்களுக்கு ரூ.7,500-ம், கட்டுநர்களுக்கு ரூ.6,500-ம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

பணியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையும் கட்டுநர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் புதிய ஊதியக் கற்றையில் காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முந்தைய ஊதியக் கற்றையில் தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தைக் கணக்கில் கொண்டு அதற்கு 15 சதவீதம் சேர்த்து வரும் கூடுதல் தொகையினை அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

புதிதாக நிர்ணயிக்கப்படக்கூடிய அடிப்படை ஊதியத்தில் 55 சதவீதம் அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு இப்பணியாளர்களுக்கும் பின்பற்றப்படும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முறையே ரூ.1,500 மற்றும் ரூ.1,200 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முறையே ரூ.1,200 மற்றும் ரூ.1,000 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முறையே ரூ.700 மற்றும் ரூ.600 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதர பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அல்லது முறையே ரூ.600 மற்றும் ரூ.500 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

1000 மற்றும் அதற்குக்கீழ் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.1,500, கட்டுநர்களுக்கு ரூ.1,000 நியாயவிலைக் கடைப் படி வழங்கப்படும்.

1001 குடும்ப அட்டைகள் முதல் 1,500 குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்களுக்கு ரூ.1,750, கட்டுநர்களுக்கு ரூ.1,250 நியாயவிலைக் கடைப் படி வழங்கப்படும்.

1501 மற்றும் அதற்கு மேல் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.2,000, கட்டுநர்களுக்கு ரூ.1,500 நியாயவிலைக் கடைப் படி வழங்கப்படும். விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முறையே ரூ.300 மருத்துவப் படி வழங்கப்படும்.

மலைவாழ் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு மலைவாழ்படி மாதம் ஒன்றுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வழங்கப்படும். 

சராசரி கடல்மட்டத்தில் மலைவாழ்விடம் சுமார் 1000 மீட்டர் மேல் உள்ள பகுதிகளில் குளிர்காலப் படி மாதம் ஒன்றுக்கு ரூ.400 வழங்கப்படும். இது குளிர்காலங்களில் மட்டும் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப் படி தற்போது உள்ளவாறு ரூ.2,500 வழங்கப்படும். ஒரே பதவியில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குத் தேர்வு நிலையும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குச் சிறப்பு நிலையும் வழங்கி தலா ஒரு ஊதிய உயர்வு (3% ) வழங்கப்படும்.'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu ration shop employees to get salary hike


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->