ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலேயே தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். 

இன்று காலை 9.55 மணிக்கு கலைவாணர் அரங்கிற்கு வரும் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அரங்கிற்கு அழைத்து வருவார்கள். பின்னர் சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்வார். அவருக்கு வலது புறம் உள்ள இருக்கையில் சபாநாயகர் அப்பாவும், இடதுபுறம் உள்ள இருக்கையில் ஆளுநரின் செயலாளர் அமருவார்கள். 

காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும். பிறகு ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவுபெறும்.

இதனை தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். பிறகு சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today assembly convenes governor speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->