தமிழக அரசின் மசோதா சட்டத்துக்கு புறம்பானது - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்ககோரி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சுமார் 10 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்க கொண்டுவரப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.  

பல்கலைக்கழக தர நிர்ணயம் மத்திய பட்டியலில் இருப்பதால், புதிய மசோதாக்கல் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN university vice chancellor post issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->